அடுத்து பாலிவுட் இயக்குனரின் படத்தில் சூர்யா! அப்போ வாடிவாசல் நிலைமை?
சூர்யா தற்போது கங்குவா என்ற பிரம்மாண்ட பட்ஜெட் படத்தில் நடித்து வருகிறார். அந்த படம் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
மேலும் சூர்யா மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் அறிவித்து நீண்ட நாட்கள் ஆன வாடிவாசல் படம் எப்போது தொடங்கும் என்று தான் ரசிகர்களும் காத்திருக்கின்றனர்.
பாலிவுட் படம்
இந்நிலையில் தற்போது சூர்யா அடுத்து பாலிவுட் இயக்குனரின் படத்தில் நடிக்க போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா என்ற இயக்குனரின் படத்தில் கர்ணனாக சூர்யா நடிக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது. மகாபாரத கதையை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தின் மூலமாக சூர்யா ஹிந்தியில் அறிமுகம் ஆகிறாராம்.
அதனால் வாடிவாசல் படத்தின் நிலைமை என்ன என தற்போது ரசிகர்கள் சற்று குழப்பத்தில் இருக்கின்றனர்.
திடீரென பவுன்சர்களுடன் சீரியல் நடிகை திவ்யா வீட்டிற்கு சென்ற நடிகர் அர்னவ்- பரபரப்பு சம்பவம்

பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா News Lankasri
