ஆரம்பமானதா சூர்யாவின் வாடிவாசல் திரைப்படம், முக்கிய நபர் வெளியிட்ட சூப்பர் அப்டேட்
நடிகர் சூர்யா தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரனமாக விளங்குபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வெற்றியடைந்து வருகிறது.
அந்த வகையில் இவர் நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் கடைசியாக வெளியான சூரரை போற்று திரைப்படம் பெரிய வெற்றியை பெற்றுள்ளது.
அதனை தொடர்ந்து தற்போது இவர் இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் சூர்யா 40 படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் வெளியாகி வைரலானது.
இந்நிலையில் சூர்யா மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகவுள்ள வாடிவாசல் திரைப்படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
ஆம், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தற்போது வாடிவாசல் திரைப்படத்தின் மியூசிக் பணிகளை தொடங்கியுள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதனால் தற்போது ரசிகர்கள் வாடிவாசல் படத்தின் ஹாஷ்டாக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
The music work for #VaadiVaasal starts today .... 🔥 @Suriya_offl @VetriMaaran @theVcreations
— G.V.Prakash Kumar (@gvprakash) April 13, 2021