90ஸ் கிட்ஸ் Favourite சூர்யவம்சம் படத்தின் இரண்டாம் பாகம்.. இனி சின்ராச கையில பிடிக்க முடியாது
விக்ரமன் இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் கடந்த 1997ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சூர்யவம்சம்.
இப்படத்தில் சரத்குமார் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். மேலும், ராதிகா, தேவயானி, மணிவண்ணன், ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
குடும்பங்கள் ரசிக்கும் கதைக்களத்தில் உருவாகி இப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் ஆனது. இப்படத்தை இன்றும் கே டிவியில் ஒளிபரப்பு செய்து குடும்பங்கள் ஒன்றாக அமர்ந்து பார்ப்பார்கள்.
அந்த அளவிற்கு 90ஸ் கிட்ஸ் Favourite படங்களில், சூர்யவம்சம் டாப் லிஸ்டில் இருக்கிறது. இப்படத்தின் இரண்டாம் பாகம் வருமா என்று ரசிகர்கள் பலரும் கேட்கின்றனர்.
இந்நிலையில், சூர்யவம்சம் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. வரும் ஆகஸ்ட் மாதம் சூர்யவம்சம் படத்தின் பணிகள் ஆரம்பிக்கவுள்ளார் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பாளர் ஆர்.பி. சவுத்திரி என நடிகர் சரத்குமார் கூறியுள்ளார்.

திருமணமான 4வது நாளில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட புதுப்பெண்! மற்றொரு அதிர்ச்சி சம்பவம் News Lankasri

டேபிளில் மிக்சர் வைத்திருந்தால் சாப்பிட்டிருப்பார்கள் - பழனிசாமியை கலாய்த்த செந்தில்பாலாஜி IBC Tamilnadu
