நடிகர் மகன் நடிகர் ஆக கூடாதா.. அது மட்டும் தான் கிடைக்கும்: மீண்டும் சர்ச்சையில் விஜய் சேதுபதி மகன்
நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா ஹீரோவாக தற்போது அறிமுகம் ஆகிறார். அவர் அனல் அரசு இயக்கத்தில் பீனிக்ஸ் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து முடித்திருக்கிறார். வரும் நவம்பர் 14ம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.
என் அப்பா வெறும் 500 ருபாய் தான் தினமும் கொடுக்கிறார், அதனால் தான் நான் நடிக்க வந்தேன் என அவர் பேசியதாக கடந்த வாரம் சர்ச்சை எழுந்தது. ஆனால் அவர் அப்படி எங்கும் பேசவில்லை என விளக்கம் கொடுத்தனர்.

நடிகர் மகன் நடிகர் ஆக கூடாதா..
இந்நிலையில் சூர்யா விஜய் சேதுபதி தற்போது அளித்திருக்க்கும் ஒரு பேட்டியில், 'டாக்டர் மகன் டாக்டர் ஆகலாம். போலீஸ் மகன் போலீஸ் ஆகலாம். ஆனால் நடிகர் மகன் நடிகர் ஆக கூடாதா."
"ஒரு நடிகரின் மகன் என்பதால் சான்ஸ் மட்டும் தான் கிடைக்கும். அதற்கு பிறகு உழைப்பை பொறுத்து தான் எல்லாம் இருக்கிறது" என கூறி இருக்கிறார் சூர்யா.
அதை தற்போது நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். டாக்டர் மகன் என்றாலும் படித்து நீட் பாஸ் செய்தால் தான் MBBS சீட் கிடைக்கும் என தற்போது ட்ரோல் செய்து வருகின்றனர்.
அந்த சான்ஸ் கிடைக்காமல் தான் எவ்வளவோ பேர் தவிக்கிறார்கள் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
பாரிஸில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட பிக்காசோவின் உண்மையான ஓவியம் News Lankasri