சூர்யகுமார் யாதவ் மெசேஜ் அனுப்பிக்கொண்டே இருக்கிறார்: பிரபல நடிகை குற்றச்சாட்டு
கிரிக்கெட் வீரர்கள் மற்றும் நடிகைகள் பற்றி கிசுகிசுக்கள் வருவது புதிய விஷயம் அல்ல. ஆனால் ஒரு நடிகையே ஒரு முன்னணி கிரிக்கெட் வீரர் தனக்கு மெசேஜ் செய்வதாக வெளிப்படையாக கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
அந்த கிரிக்கெட் வீரர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பது தான் பரபரப்புக்கு காரணம்.

சூர்யா குமார் யாதவ்
இந்திய கிரிக்கெட் அணியின் T20 கேப்டனாக இருக்கும் சூர்யகுமார் யாதவ் தனக்கு மெசேஜ் அனுப்பிக்கொண்டே இருந்தார் என நடிகை குஷி கபூர் கூறி இருக்கிறார்.
கிரிக்கெட் வீரரை டேட் செய்ய விரும்புகிறீர்களா என செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு, 'என் பின்னால் பல கிரிக்கெட் வீரர்கள் சுற்றினார்கள். சூர்யகுமார் யாதவ் எனக்கு தொடர்ந்து மெசேஜ் அனுப்பிக்கொண்டே இருந்தார்.'
'நான் கிரிக்கெட் வீரரை காதலிக்க விரும்பவில்லை. என்னை பற்றி கிசுகிசுக்கள் வருவதையும் விரும்பவில்லை' என கூறி இருக்கிறார்.
நடிகை இப்படி வெளிப்படையாக கூறி இருக்கும் விஷயம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
