புதிய படத்திற்காக சூர்யாவின் சம்பளம் இத்தனை கோடியாம்! பலரும் எதிர்பார்த்த கூட்டணி!
சூர்யா சூரரை போற்று படத்தின் மூலம் மீண்டும் தன் வெற்றியை பதிவு செய்துவிட்டார். பல விமர்சனங்களுக்கிடையிலும் அவர் பொறுமையாக இருந்து செயலால் சாதித்துக்காட்டி பதில் கொடுத்துவிட்டார்.
சமூக வலைதளத்திலும் அதிகம் தேடப்பட்ட படம் என்ற சிறப்பையும் பெற்றது.
இந்நிலையில் சூர்யாவின் அடுத்த படமான #Suriya40 இயக்குனர் பாண்டிராஜ் உடன் தான் என்பது உறுதியாகிவிட்டது.
படத்திற்கு வாடிவாசல் எனவும் பெயர் வைத்துள்ளனர். இப்படத்திற்கான நடிகர்கள் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருவதாகவும், ஜனவரி 2 அல்லது 3 ம் வாரத்தில் படப்பிடிப்பை தொடங்கிவிடலாம் என அண்மையில் பாண்டிராஜ் பதிவிட்டிருந்தார்.
சூர்யா இப்படத்திற்கு ரூ 35 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக தகவல் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பரவு தொடங்கியுள்ளது.
தமிழ், தெலுங்கிலும் சூர்யாவுக்கு ரசிகர்கள் இருக்கின்றனர். நல்ல மார்க்கெட்டும் இருக்கிறது. பாண்டிராஜ் இயக்கிய பசங்க படத்தை சூர்யா தயாரித்ததோடு கவுரவ வேடத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.