சூர்யவம்சம் படத்தில் சின்ன பிரியாராமணாக நடித்த இந்த சீரியல் நடிகை தானா?- அவரே வெளியிட்ட வீடியோ
சூர்யவம்சம்
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான படங்களில் ஒன்று தான் சூர்யவம்சம். விக்ரமன் இயக்க 1997ம் ஆண்டு வெளியான இப்படத்தில் சரத்குமார், தேவயானி, ராதிகா, மணிவண்ணன் என பலர் நடித்திருந்தார்கள்.
90ஸ் கிட்ஸ்களுக்கு எப்போதுமே மறக்க முடியாத ஒரு படமாக இந்த படம் உள்ளது, படத்தில் இடம்பெற்ற ரோசா பூ சின்ன ரோசா பூ போன்ற பாடல் இப்போது மக்களால் கொண்டாடப்படுகிறது.
தற்போது இந்த படத்தில் நடித்த நடிகை குறித்து தான் ஒரு தகவல் வந்துள்ளது.
யார் இவர்
பிரியாராமன் சரத்குமாரின் முறை பெண்ணாக இப்படத்தில் நடித்திருக்கிறார். அவரின் சிறுவயது கதாபாத்திரத்தில் குறிப்பாக ரோசா பூ சின்ன ரோசாப்பூ என்ற பாடலில் இடம் பிடித்திருக்கும் பெண்ணை குறித்த தகவல் தான் இப்போது வெளியாகி இருக்கிறது.
அந்த பாடலில் பிரியாராமன் சிறுவயது பெண்ணாக சீரியல் நடிகை நிவாசினி திவ்யா தான் நடித்துள்ளாராம்.
மகாநதி சீரியலில் இருந்து விலகிய முக்கிய நடிகை- அவருக்கு பதில் நடிக்க வந்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை
2013ம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான செல்லக்கிளி என்ற தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான இவர் யாழினி, மரகத வீணை என தொடர்ந்து நடித்து வந்திருக்கிறார்.
அவரே சூர்யவம்சம் பாடலில் தனது காட்சி வரும் அது நான் தான் என வீடியோ வெளியிட்டுள்ளார்.