என் அம்மா மருத்துவமனையில் இறந்தபோது எனக்கு இப்படி ஆனது- எமோஷ்னலாக பேசிய சுசீந்திரன்

death director suseenthiran amma veerapandiyapuram
By Yathrika Feb 12, 2022 11:10 AM GMT
Report

வெண்ணிலா கபடிகுழு என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி இப்போது ஈஸ்வரன் வரை பல படங்கள் இயக்கி வெற்றிநடைபோடுபவர் சுசீந்திரன்.

இவர் தற்போது வீரபாண்டியபுரம் என்ற படத்தை இயக்கியுள்ளார், இப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் நடிகர் ஜெய்.

படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சுசீந்திரன் பேசும்போது, கொரோனாவால் கடந்த வருடம் பலரை நாம் இழந்திருக்கிறோம்.

என்னுடைய மேனேஜர், வெண்ணிலா கபடி குழு நிதிஷ், நண்பர் கார்த்தி என என்னை சுற்றி பலர் இறந்தார்கள். அதிலும் என் மருத்துவமனையில் இருந்தபோது நான் மட்டும் தான் அவருடன் இருந்தேன்.

அவர் இறந்துவிட்டார் என்று எனக்கு தெரிந்ததும் என்ன செய்வது என்பதே தெரியவில்லை, உடல் எல்லாம் நடுங்க ஆரம்பித்துவிட்டது. எனது அப்பாவிடம் இதை எப்படி சொல்லப் போகிறேன் என்ற பதட்டம் அதிகமாக இருந்தது.

இப்படி பலரது மரணத்தை தாண்டி சினிமா மீது நாள் வைத்துள்ள காதல் என்னை நடமாட வைத்தது என எமோஷ்னலாக பேசியுள்ளார். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US