சுஷாந்த் சிங் தற்கொலை இல்லை.. அது கொலை: போஸ்ட் மார்ட்டம் செய்தவர் அதிர்ச்சி பேட்டி
நடிகர் சுஷாந்த் சிங் உடலை பிரேத பரிசோதனை செய்தவர் தற்போது சொன்ன அதிர்ச்சி தகவல்.
சுஷாந்த் சிங்
தோணியின் வாழ்க்கை வரலாற்று படம் உட்பட பல படங்களை நடித்து பாப்புலர் ஆன நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட். அவர் கடந்த 2020 ஜூன் 14ம் தேதி அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மரணத்தில் சந்தேகம் எழுந்த நிலையில், அது பற்றி போலீசாரும் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் இறுதியில் அது தற்கொலை என தெரிவித்தனர்.

போஸ்ட் மார்ட்டம் செய்தவர் பேட்டி
இந்நிலையில் சுஷாந்த் சிங்கின் உடலை ப்ரேதே பரிசோதனை செய்த ஷா என்ற ஒரு ஊழியர் தற்போது அளித்திருக்கும் ஒரு பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
"சுஷாந்த் உடலை முதலில் பார்க்கும்போதே அது தற்கொலை அல்ல கொலை என தெரிந்தது. அவரது உடல் மற்றும் கழுத்தில் சில மார்க்குகள் இருந்தது. இது பற்றி அதிகாரிகளிடம் சொன்ன போது அவர்கள் என்னை ரூல்ஸ் படி வேலை செய்ய சொன்னார்கள்."
"வீடியோ பதிவு செய்யாமல் போட்டோ மட்டும் எடுத்துவிட்டு உடலை போலீசிடம் ஒப்படைக்க சொன்னார்கள். அவர்கள் சொன்னபடி செய்துவிட்டோம்" என அந்த ஊழியர் ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.

நடிகை கஜோல் மகளா இது? பொது இடத்திற்கு எல்லைமீறிய கிளாமர் உடையில் வந்த வீடியோ