மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்கின் உறவினர்கள் 5 பேர் விபத்தில் பலி! அதிர்ச்சியளிக்கும் தகவல்..

Accident Sushanth Singh
By Jeeva Nov 16, 2021 11:47 AM GMT
Report

பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகராக திகழ்ந்து வந்த சுஷாந்த் சிங் ராஜ்புட், கடந்த 2020 ஆம் ஆண்டு மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கை போ சே திரைப்படத்தின் மூலம் அறிமுகமான சுஷாந்த் சிங், M.S.தோனி திரைப்படத்தில் தோனியாக நடித்து இந்தியளவில் அனைவருக்கும் பிடித்த நடிகராக மாறினார்.

மேலும் திரையுலகில் முன்னணி நடிகராக உருவெடுத்த வந்த சமயத்தில் தான் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் மறைவு ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகையே அதிர்ச்சிக்கு உள்ளாகியது.

இந்நிலையில் தற்போது பிகார் லக்கிசராய் மாவட்ட தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட கார் விபத்தில் சுஷாந்த் சிங்கின் குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அந்த விபத்தில் 6 நபர்கள் மரணமடைந்துள்ளதாகவும் அதில் 5 பேர் சுஷாந்த் சிங்கின் உறவினர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. 


Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US