44 வயதில் காதலரை பிரேக்கப் செய்த சுஷ்மிதா சென்! அவருக்கு இத்தனை வயது குறைவா?
பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென்னை தெரியாதவர்கள் இருக்க முடியாது. 1994ல் மிஸ் யூனிவர்ஸ் பட்டத்தை ஜெயித்து அதன் பின் பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருகிறார். அவருக்கு தற்போது 44 வயதாகிறது.
சுஷ்மிதா சென் நடிப்பில் ஆர்யா 2 என்ற வெப் சீரிஸ் சமீபத்தில் ஹாட்ஸ்டாரில் வெளியானது. முதல் சீசன் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டாம் சீசன் தற்போது வந்திருக்கிறது..
44 வயதாகும் சுஷ்மிதா சென் தன்னை விட 15 வயது குறைந்த ரோமன் ஷால் என்ற நபரை கடந்த சில காலமாக காதலித்து வந்தார். சுஷ்மிதாவின் ரசிகரான அவர் சமூக வலைத்தளத்தில் அவருக்கு மெசேஜ் அனுப்பி. இருக்கிறார். அதன் மூலமாக அவர்கள் நடுவில் காதல் மலர்ந்து, அதன் பின் சுஷ்மிதா சென் அபார்ட்மெண்டில் தான் ரோமன் ஒன்றாக வசித்து வந்தார்.
சுஷ்மிதா மற்றும் அவராது இரண்டு மகள்கள் உடன் இருக்கும் பல்வேறு புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர். இந்நிலையில் தற்போது சுஷ்மிதா ரோமன் ஷாலை பிரேக்கப் செய்திருக்கிறார். அவர் சுஷ்மிதாவின் அபார்ட்மெண்டில் இருந்து வெளியேறிவிட்டாராம்.
பிரேக்கப்பை சுஷ்மிதாவே இன்ஸ்டாகிராமில் உறுதி செய்திருக்கிறார். அவரது பதிவு இதோ..
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri