முடிவுக்கு வந்த சுஷ்மிதா சென் புது காதல்? இரண்டே மாதத்தில் இப்படியா
சுஷ்மிதா சென் - லலித் மோடி காதல்
பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென் மற்றும் ஐபிஎல் போட்டிகளை உருவாக்கிய லலித் மோடி ஆகிய இருவரும் காதலித்து வருவதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தனர். அவர்கள் ஜோடியாக இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி இணையத்தில் வைரல் ஆனது.
சுஷ்மிதா அதற்கு முன் காதலித்து வந்த ரோமன் ஷால் என்பவரை பிரேக்கப் செய்த நிலையில், அவர் பணத்திற்காக தான் லலித் மோடியுடன் காதலில் இருக்கிறார் என நெட்டிசன்கள் விமர்சித்தனர். அதற்கு சுஷ்மிதா பதிலடி கொடுத்து பேசி இருந்தார்.
பிரேக்கப்?
ஜூலையில் லலித் மோடி காதலை அறிவித்தபோது அவரது இன்ஸ்டா பயோவில் "finally starting a new life with my partner in crime. My love @sushmitasen47" என குறிப்பிட்டு இருந்தார்.
ஆனால் தற்போது அவர் சுஷ்மிதா சென் பற்றிய வரியை இன்ஸ்டாவில் இருந்து நீக்கிவிட்டார். அதனால் அவர்கள் பிரிந்துவிட்டார்களா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. இரண்டு மாதங்களிலேயே அவர்கள் பிரிவது பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ராட்சசன் ரீமேக்.. என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்