பணத்திற்காக காதலரை மாற்றினேனா.. சுஷ்மிதா சென் ட்ரோல்களுக்கு பதிலடி
பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென் மற்றும் லலித் மோடி இருவரும் காதலித்து வரும் செய்தி சில தினங்களுக்கு முன்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
46 வயது வரை திருமணம் செய்துகொள்ளாமல் இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வரும் சுஷ்மிதா சென், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தான் முன்னாள் காதலர் ரோமன் ஷால் என்பவரை பிரேக்கப் செய்தார்.
தற்போது அவர் லலித் மோடியை டேட்டிங் செய்ய தொடங்கி இருக்கிறார், விரைவில் திருமணமும் செய்ய போகிறார்கள் என கூறப்படுகிறது. பணத்திற்காக தான் சுஷ்மிதா சென் காதலரை மாற்றி இருக்கிறார் என கூறி அவரை Gold Digger என குறிப்பிட்டு நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
அதற்கு பதிலடி கொடுத்து இருக்கும் சுஷ்மிதா சென் "I dig deeper than Gold…and I’ve always (famously) preferred Diamonds!!??❤️And yes I still buy them myself!!!" என பதிலடி கொடுத்து இருக்கிறார்.
எனக்கு வைரங்கள் தான் பிடிக்கும், அதையும் நானே தான் வாங்குகிறேன் என கூறி இருக்கிறார் அவர்.