வினுஷா நடிக்கும் சுட்டும் விழி சுடரே சீரியலின் புதிய புரொமோ... எப்போது ஆரம்பம்?
வினுஷா
வினுஷா தேவி, விஜய் தொலைக்காட்சியில் பிரவீன் பென்னட் இயக்கத்தில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா என்ற சீரியல் மூலம் பிரபலமானவர்.
அந்த தொடர் அவருக்கு நல்ல ரீச் கொடுக்க அப்படியே பாரதி கண்ணம்மா 2ம் பாகத்திலும் நாயகியாக நடித்தார். பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் சுமாராக விளையாடி இருந்தார்.
அந்நிகழ்ச்சிக்கு பிறகு விஜய் தொலைக்காட்சியிலேயே பனிவிழும் மலர்வனம் என்ற சீரியலில் நடித்தார், அந்த தொடரும் முடிவுக்கு வந்துவிட்டது.

புதிய சீரியல்
நீண்ட இடைவேளைக்கு பிறகு வினுஷா தேவி, சுட்டும் விழி சுடரே என்ற தொடரில் கமிட்டாகியிருக்கும் புரொமோ வெளியானது, பிக்பாஸ் முடிந்த பிறகு ஒளிபரப்பாக தொடங்கும் என கூறப்படுகிறது.

தற்போது இந்த புதிய சீரியலின் 2வது புரொமோ வெளியாகியுள்ளது, அதில் குழந்தை நட்சத்திரம் ஒருவரின் கதாபாத்திரம் இடம்பெற்றுள்ளது. இதோ அந்த உணர்ச்சிபூர்வமான 2வது புரொமோ,