டொரோண்டோ திரைப்படவிழாவில் பாரட்டுக்களை அள்ளிய சுசி கணேசனின் “தில் ஹை கிரே"
டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் (TIFF) மிகவும் எதிர்பார்க்கப்பட்ட "தில் ஹை கிரே" பிரீமியர் -பார்வையாளர்களையும் விமர்சகர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
சுசி கணேசனின் வழக்கத்திற்கு மாறான இயக்கம் மற்றும் ஊர்வசி ரவுடேலா, வினீத் குமார் சிங் மற்றும் அக்ஷய் ஓபராய் ஆகியோரின் சிறந்த நடிப்பு மீது பாராட்டு மழை பொழிகிறது .
பல படங்கள் ஹைடெக் ஸ்பெஷல் எஃபெக்ட்களில் அதிகளவில் முதலீடு செய்து கதையின் வேகத்தைபதஅதிகரிக்கச் செய்தாலும், சுசி கணேசனின் எழுத்து மற்றும் இயக்கம் முதன்மை பெறுவதால் "தில் ஹை கிரே" தனித்து நிற்கிறது என்று விமர்சகர்கள் சுட்டிக்காட்டினர்.
சுசி கணேசன் இதை பற்றி பேசும் பொழுது , "இந்தப் படம் பாராட்டுகளைப் பெறும் என்று நான் எதிர்பார்த்தேன், ஆனால் உலக சினிமாக்களின் பரிட்சையமிக்க பார்வையாளர்களிடமிருந்து அபரீதமான் வரவேற்பும் பாராட்டும் வருமென்று எதிர்பார்க்கவில்லை! இடி முழக்கம் போன்றதோர் கைதட்டல் சத்ததில் பட்ட கஷ்டமெல்லாம் கரைந்து போய்விட்டது . ஒரு படைப்பாளிக்கு இதை விட என்ன வேண்டும் ? TIFF மற்றும் NFDCக்கு நன்றி." என்றார்
ஊர்வசி ரவுடேலா கூறுகையில், "ஒரு நடிகையாக நான் மிகவும் பெருமைப்படுகிறேன், எங்களுக்கு கிடைத்த அபாரமான வாய்ப்புக்காக எனது மகத்தான நன்றியைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். சுசி சார், தயாரிப்பாளர் ரமேஷ் ரெட்டி சார் - ஆகியோருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். "தில் ஹை கிரே" படத்தின் மொத்த நடிகர்கள் மற்றும் சம்மந்தப்பட்ட அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் எனது நன்றி .
திரைப்படங்களுக்கு எல்லைகளை மீறவும், மக்களை இணைக்கவும், முக்கியமான விஷயங்களில் வெளிச்சம் பாய்ச்சவும் வல்லமை உள்ளது. "தில் ஹை கிரே" திரைப்படம் மட்டுமல்ல; மற்றும் அர்த்தமுள்ள செய்தியைச் சொல்லவும், உணர்ச்சிகளைத் தூண்டவும் கூட்டு முயற்சியின் பிரதிபலிப்பு, இப்படைப்பு !.” என்றார்
படத்தில் வரும் ஒரு வசனம் - ஐ ஆம் ஹானஸ்ட் கரெப்ட் - படம் முடிந்து வெளியேறும் போது , ஒரு விமர்சகர் , கதாநாயகனைப் போல் ஆடியும் , பேசியும் காட்டியது - படம் ஏற்படுத்திய தாக்கத்தை பறைசாற்றுவது போல் அமைந்திருந்தது .
"தில் ஹை கிரே" NFDC தலைமையிலான இந்திய பெவிலியனின் ஒரு பகுதியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது !