விஜய்யின் வரவால் குலுங்கிய கோவை... பிரபலத்திற்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்த தொண்டர்கள்
நடிகர் விஜய்
பாக்ஸ் ஆபிஸ் மன்னனாக வலம்வரும் நடிகர் விஜய் நடிப்பில் கடைசியாக ஜனநாயகன் திரைப்படம் வெளியாக உள்ளது.
எச்.வினோத் இயக்கத்தில் தயாராகி வரும் இப்படம் அரசியல் பின்னணி கொண்ட முக்கிய படமாக விஜய் திரைப்பயணத்தில் அமைய உள்ளது. ஜனநாயகன் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் தமிழக வியாபாரம் மட்டுமே ரூ. 100 கோடியை நெருங்கிவிட்டதாக கூறப்படுகிறது.
2026 தேர்தலை விஜய் சந்திக்க உள்ள நிலையில் ஜனநாயகன் படத்தின் வேலைகளை செம வேகமாக செய்து வருகிறார்.
ஸ்வீட் சர்ப்ரைஸ்
தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் அக்கட்சியின் பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்ளும் கருத்தரங்கம் கோவையில் நடைபெறுகிறது.
இதற்காக விஜய் கோவைக்கு செல்ல அவரது வரவால் கோவையே குலுங்கியுள்ளது. சில தொண்டர்கள் பவுன்சர்களையும் தாண்டி வண்டி மீது எல்லாம் ஏறி விஜய்க்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் எல்லாம் கொடுத்துள்ளனர்.
இதோ சூப்பர் வீடியோ,
வாகனத்தின் மீது ஏறி Vijay-க்கு கை கொடுத்த தொண்டர்..😱 #TVKVijay#TVK #TVKVijay #ThalapathyVijay #Kovai #Coimbatore #Cineulagam pic.twitter.com/9mUMoCXeVi
— Cineulagam (@cineulagam) April 26, 2025