ஸ்வீட்ஹார்ட் திரைவிமர்சனம்

By Kathick 19 hours ago
Report

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரித்து, இசையமைத்துள்ள திரைப்படம் ஸ்வீட் ஹார்ட். ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து ரியோ ராஜ் நடிப்பில் வெளிவரவிருக்கும் இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பு இருந்தது.

ஸ்வீட்ஹார்ட் திரைவிமர்சனம் | Sweetheart Movie Review

மேலும் இப்படத்தை அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ் சுகுமார் இயக்கியுள்ளார். இன்று திரையரங்கில் வெளிவந்துள்ள ஸ்வீட்ஹார்ட் திரைப்படம் எப்படி இருக்கிறது என்று விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க.

கதைக்களம்

5 வயதில் கதாநாயகன் ரியோ தனது தாய்யை பிரிக்கிறார். 12 வயதில் தனது தந்தையை இழக்கிறார். சிறு வயதில் இருந்தே தனியாக வளர்ந்து வரும் ரியோ, ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து இறுதி வரை காதலோடு வாழ முடியாது என்கிற மனநிலைக்கு வருகிறார்.

ஸ்வீட்ஹார்ட் திரைவிமர்சனம் | Sweetheart Movie Review

காலங்கள் செல்ல, எதர்ச்சியாக கதாநாயகி கோபிகாவை (மனு) சந்திக்கிறார். இருவரும் பேசி பழகி வரும் நிலையில், கோபிகாவிற்கு ரியோ மீது காதல் வருகிறது. ஆனால், ரியோ அந்த காதலை தவிர்த்து வருகிறார்.

ஸ்வீட்ஹார்ட் திரைவிமர்சனம் | Sweetheart Movie Review

ஒரு கட்டத்தில் இருவரும் தங்களது காதலை உறுதி செய்ய, நெருங்கிய உறவில் ஈடுபடுகிறார்கள். இதனால் கோபிகா கர்ப்பமாகிறார். இந்த குழந்தை தனக்கு வேண்டும் என கோபிகா சொல்ல, இல்லை இந்த குழந்தையை களைத்து விடலாம் என ரியோ கூறுகிறார். இதன்பின் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதி கதை.

படத்தை பற்றிய அலசல்

கதாநாயகன் ரியோ மற்றும் கதாநாயகி கோபிகா இருவருடைய நடிப்பும் படத்திற்கு பலம். காதலர்கள் இடையே வரும் வாக்குவாதங்கள், ரொமான்ஸ் மற்றும் பிரேக் அப் பின் உடைந்து ஆளும் காட்சிகள் என அனைத்திலும் இருவரும் சிறப்பாக நடித்துள்ளனர். மற்ற நடிகர்கள் மற்றும் நடிகைகளின் நடிப்பும் கவனத்தை பெறுகிறது.

ஸ்வீட்ஹார்ட் திரைவிமர்சனம் | Sweetheart Movie Review

அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ் சுகுமார் எடுத்துக்கொண்ட கதைக்களம் இன்றைய இளைஞர்களை கவரும் வகையில் உள்ளது. அதுவே இப்படத்தின் மிகப்பெரிய பலமாகும். முதல் பாதி திரைக்கதை தொய்வாக இருந்தாலும், இரண்டாம் பாதி விறுவிறுப்பாக உள்ளது.

குறிப்பாக கடைசி 40 நிமிடங்களில் வரும் எமோஷனல் காட்சிகள் நம்மை கலங்க வைக்கிறது. மேலும் கிளைமாக்ஸ் படத்தின் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட்.

ஸ்வீட்ஹார்ட் திரைவிமர்சனம் | Sweetheart Movie Review

ப்ளாக் பஸ்டர் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் சொத்து மதிப்பு! எவ்வளவு தெரியுமா

ப்ளாக் பஸ்டர் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் சொத்து மதிப்பு! எவ்வளவு தெரியுமா

ஸ்வீட்ஹார்ட் இந்த டிரைலரை பார்த்துவிட்டு, பலரும் இது டாடா, பேச்சிலர் படங்களை போல் உள்ளது என கூறினார்கள். ஆனால், அவர்களுக்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் இப்படத்தின் கடைசி 40 நிமிடங்கள் இருக்கும்.

படத்தின் மாபெரும் பலம் என்றால் அது யுவன் ஷங்கர் ராஜாவின் இசைதான். அது என்னமோ தெரியவில்லை, என்ன பயமோ புரியவில்லை, காதல் என்று வந்துவிட்டால் இவருடைய இசையை அடித்துக்கொள்ள ஆளே இல்லை என்று தான் சொல்லவேண்டும்.

ஸ்வீட்ஹார்ட் திரைவிமர்சனம் | Sweetheart Movie Review

ஆம், காதல் காட்சிகள், எமோஷனல் காட்சி என அனைத்திலும் பின்னணி இசை மற்றும், பாடல்களால் நம்மை வேறொரு உலகத்திற்கு கொண்டு சென்றுவிட்டார். ரசிகர்கள் கூறுவது போல் என்றும் நம்பர் 1 U1. ஒளிப்பதிவு, எடிட்டிங் சிறப்பு.

பிளஸ் பாயிண்ட்

ரியோ ராஜ், கோபிகா நடிப்பு

யுவனின் பின்னணி இசை மற்றும் பாடல்கள்

கடைசி 40 நிமிடங்கள், குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சி

இயக்கம்

மைனஸ் பாயிண்ட்

முதல் பாதி

அனைவருக்கும் இப்படம் கனெக்ட் ஆகுமா என்பது சந்தேகம் தான்.

மொத்தத்தில் இந்த ஸ்வீட்ஹார்ட் இளைஞர்களின் மனதில் இடம்பெறும் 

ஸ்வீட்ஹார்ட் திரைவிமர்சனம் | Sweetheart Movie Review

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US