நடிகையை தனது காலில் ஏறி நிற்க சொன்ன நடிகர் உதயநிதி ஸ்டாலின்.. படப்பிடிப்பில் நடந்த சம்பவம்
உதயநிதி ஸ்டாலின்
ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் உதயநிதி ஸ்டாலின். இதன்பின் நகைச்சுவை கலந்த ஆக்ஷன் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.

ஆனால், அரசியலில் களமிறங்கிய பின் சமூக அக்கறையுடன் நெஞ்சுக்கு நீதி, மாமன்னன் போன்ற படங்களில் நடித்தார். மாமன்னன் தனது கடைசி படம் என கூறி, சினிமாவிலிருந்து விலகி தற்போது துணை முதலமைச்சராக உள்ளார்.
நடிகை பகிர்ந்த சம்பவம்
சினிமா பிரபலங்கள் தங்களது படப்பிடிப்பு அனுபவங்களை அவ்வப்போது பேட்டிகளில் பகிர்ந்துகொள்வார்கள். அப்படி, தற்போது ஜீ தமிழ் வாரிசு சீரியல் கதாநாயகி ஸ்வேதா சமீபத்திய பேட்டி ஒன்றில், இப்படை வெல்லும் படத்தில் உதயநிதி ஸ்டாலின் உடன் இணைந்து நடித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

இதில், "இப்படை வெல்லும் படத்தின் படப்பிடிப்பில், கோவிலுக்கு மேல், கலசத்திற்கு அருகில் உள்ள இடத்தில் நின்றுகொண்டு படப்பிடிப்பு நடந்தது. அது ட்ரோன் ஷாட், யாருமே அங்கு இல்லை. நான், ராதிகா அம்மா, உதயநிதி ஸ்டாலின் சார் மற்றும் என் தங்கையாக நடித்தவர் மட்டும்தான் இருந்தோம். காலில் செருப்பு இல்லை, செம வெயில், செமயா கொதிக்குது, என்னால் நிற்க முடியவில்லை. இதை பார்த்துவிட்டு, 'என் கால் மீது ஏறி நில்' என உதயநிதி ஸ்டாலின் சொன்னார். இல்ல சார் வேண்டாம் என கூறினேன். ஆனால் என்னால் வெயில் சூட்டை தாங்க முடியவில்லை. 'இல்ல மா பரவாயில்லை என் கால் மீது ஏறி நில்லுங்க' என மீண்டும் சொன்னார்" என படப்பிடிப்பு தளத்தில் நடந்த அனுபவத்தை சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துகொண்டார் நடிகை ஸ்வேதா.
