ரூ. 530 கோடி சம்பளம்!! ஹாலிவுட் நடிகை சிட்னி ஸ்வீனி பாலிவுட்டில் அழைப்பு?
சிட்னி ஸ்வீனி
ஹாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக இருப்பவர் சிட்னி ஸ்வீனி. இவர் The Voyeurs, Anyone but You, Madame Web, Immaculate, Eden, Christy ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். அடுத்ததாக இவர் நடிப்பில் The Housemaid எனும் படம் உருவாகி வருகிறது.
சமீபத்தில் கூட இவர் அறிமுகப்படுத்திய சோப் படுவைரலானது. இந்த சோப், நடிகை சிட்னி ஸ்வீனி குளித்த நீர்த்துளிகளை கொண்டு உருவாக்கப்படுகிறது என்றும் இதன் விலை 8 டாலர் என்றும் கூறியிருந்தனர்.
பாலிவுட்டில் அழைப்பு
இளைஞர்களின் மனம் கவர்ந்த நாயகியாக வலம் வரும் சிட்னி ஸ்வீனிக்கு பாலிவுட் திரையுலகில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய பட்ஜெட்டில் இப்படம் உருவாகவுள்ளதாகவும், இப்படத்தில் சிட்னி ஸ்வீனி நடிக்க ரூ. 530 கோடி சம்பளம் என்கிற ஆஃபர் கொடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த ஆண்டு துவங்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நியூயார்க், லண்டன், பாரிஸ், துபாய் ஆகிய இடங்களில் நடக்கும் என கூறப்படுகிறது. ஆனால், இதுவரை அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
