சிம்புவை தான் திருமணம் செய்வேன் என சொன்ன சாந்தினி! டிஆர் கண்ணீருடன் பதில்
நடிகர் சிம்புவுக்கு தற்போது 42 வயதாகிறது. அவருக்கு எப்போது திருமணம் என்பது தான் எல்லோரும் நீண்டகாலமாக கேட்டு வரும் கேள்வி.
அவரது பெற்றோரும் பெண் பார்த்து வருவதாக நீண்டகாலமாக கூறப்பட்டு வருகிறது. இருப்பினும் சிம்புவின் திருமணம் தள்ளிப்போய் கொண்டே இருக்கிறது. செய்தியாளர்கள் இது பற்றி கேட்டால் கூட சிம்புவின் அப்பா டிஆர் எப்போதும் எமோஷ்னல் ஆகிவிடுவார்.
இந்நிலையில் ஜீ தமிழின் சிங்கிள் பசங்க ஷோவுக்கு டிஆர் தற்போது நடுவராக வந்திருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கும் சீரியல் நடிகை சாந்தினி பேசும்போது 'நான் திருமணம் செய்தால் சிம்புவை தான் திருமணம் செய்வேன்' என கூறினார். தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் நடித்து வரும் சாந்தினி, சிங்கிள் பசங்க ஷோவில் கூமாப்பட்டி தங்கபாண்டி உடன் பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது.
கண்கலங்கி பேசிய டிஆர்
சாந்தினி சொன்னதை கேட்டு டிஆர் கண்ணீருடன் பேசினார். "நானும் மனுஷன் தான். எனக்கும் இதயம் இருக்கு. மனைவியை விரும்புவது மட்டுமே காதல் இல்லை. பெற்ற பிள்ளைகளை நேசிப்பதும்.. அது ஒரு விதமான அன்பு. அது ஒரு விதமான பாசம்."
"என் மகனின் பெயரை நீ சொல்லும்போதே, அது என்னை இந்த அளவுக்கு காயப்படுத்துகிறது, அது ஒரு ஆறுதல் நீ சொன்னது. உன்னை நான் தப்பாக நினைக்கவில்லை."
"உண்மையிலேயே என் பையனை உயிருக்கு உயிராக நேசிக்க கூடிய ஒரு பெண்ணை கடவுள் கொடுக்கணும். நான் என் மகனிடம் சென்று நீ கல்யாணம் பண்ணிக்கிறியா என கேட்க மாட்டேன். நான் எதுவாக இருந்தாலும் இறைவனிடம் மட்டுமே தான் கேட்பேன்."
"திருமணம் செய்ய வேண்டும் தான். ஆனால் எல்லாரும் ஒரே மாதிரி வாழ வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை."
"நானும் என் மனைவியும் சிம்புவை compel செய்தால் அவன் மறுக்க மாட்டான். அவன் மறுக்க மாட்டான் என்பதற்காகவே நானோ என் மனைவியோ என் மகனை தள்ள மாட்டோம்" என டிஆர் கண்ணீருடன் பேசி இருக்கிறார்.