இலங்கை தமிழர்கள் அந்த விஷயத்திற்காக படு கஷ்டம்... சரிகமப நிகழ்ச்சியில் டி.ராஜேந்தர் எமோஷ்னல்
சரிகமப
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் படு பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வரும் பாடல் நிகழ்ச்சி சரிகமப.
ஆரம்பத்தில் பெரிய ரீச் இல்லை என்றாலும் இப்போது அப்படி இல்லை. தொலைக்காட்சியில் வரும் ரியாலிட்டி ஷோக்கள் லிஸ்ட் எடுத்தால் டாப்பில் ஜீ தமிழின் சரிகமப ஷோ வந்துவிடும்.
சமீபத்தில் சரிகமப ஷோவின் சிறுவர்களுக்கான சீசன் முடிவடைய அதே வேகத்தில் பெரியவர்களுக்கான சீசன் தொடங்கிவிட்டது.
டி.ராஜேந்தர்
சரிகமப சீனியர் 5 சீசனில் இலங்கை தமிழர் பிரஷான் என்ற இளைஞர் கலந்துகொண்டுள்ளார்.
இவரைப் போல சரிகமப நிகழ்ச்சியில் இலங்கை தமிழர்கள் கலந்துகொண்டு பாடியுள்ளனர். பிரஷான் குடும்பம் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இலங்கையில் இருந்து அகதியாக சுவிஷுக்கு சென்று இருக்கிறார்கள், அங்கேயும் குடியுரிமை இல்லை, இலங்கையிலும் இல்லை.
இப்போது நிகழ்ச்சியில் தொடரவும் முடியாது எனது விசா சில தினங்களில் முடிந்துவிடும் என கூறினார்.
பிரஷான் சொன்ன விஷயங்களை கேட்டு அரங்கமே அவருக்காக வருந்தியது.
பின் டி.ராஜேந்தர் பேசும்போது, வாழ்க்கையுடைய நிலைமைய பார்க்கும் போது மனசு ரொம்ப பாரம் ஆயிடுச்சு, ஆனா ஒன்று ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு நாழிகைக்கும் ஒவ்வொரு தினத்திற்கும் கடவுள் ஒரு கணக்கு வைத்து இருக்கிறான்.
ஜூன் 3ஆம் தேதி ஊருக்கு புறப்பட்டு போகணும் என்று சொல்லி இருக்கிறாய் பிரஷான் நீ விமானத்தில் பறக்கலாம். ஆனால் இந்த சரிகமபவின் சங்கீத குடும்பம் உன்னை மறக்காது.
எங்கள் நெஞ்சங்களில் எல்லாம் உண்மை சுமக்கிறோம் என்றும் வாழ்க பல்லாண்டு என்று வாழ்த்தி இருக்கிறார்.

சீனா, பாகிஸ்தானுக்கு பீதி தரும் செய்தி... ஒலியை விட வேகமான இந்த ஏவுகணையை சோதிக்கும் இந்தியா News Lankasri
