சிகிச்சைக்கு சென்ற டிஆர் இப்போது எப்படி இருக்கிறார்.. அமெரிக்காவில் இருந்து வந்த வீடியோ இதோ
நடிகர் டி.ராஜேந்தர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு அவரை மகன் சிம்பு கூட்டி சென்றிருக்கிறார்.
அதற்காக சிம்பு தான் நடிக்கும் படங்களின் ஷூட்டிங்கை நிறுத்தி வைத்துவிட்டு அமெரிக்கா சென்று அப்பாவை பார்த்துக்கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் தற்போது டிஆரை அமெரிக்காவில் நடிகர் பாண்டியராஜன் மற்றும் நெப்போலியன் ஆகியோர் நேரில் சென்று சந்தித்து பேசி இருக்கிறார்கள்.
அப்போது டிஆர் அமெரிக்க தமிழ் சங்கத்திற்கு வீடியோ வாயிலாக உரையாற்றி இருக்கிறார். உடல்நல குறைவு காரணமாக நேரில் வர முடியவில்லை என்றும், அதனால் தான் வீடியோவில் பேசுகிறேன் என டிஆர் தெரிவித்து உள்ளார்.
அந்த வீடியோவை நடிகர் பாண்டியராஜனின் மகன் வெளியிட்டு இருக்கிறார்.
இதோ
#TRajendar latest video pic.twitter.com/NwOcvWn5zg
— Parthiban A (@ParthibanAPN) July 4, 2022

ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் வச்சிருக்கீங்களா - இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க IBC Tamilnadu
