நாகார்ஜுனா
இயக்குநர் ரா. கார்த்தி இயக்கத்தில் நாகார்ஜுனாவின் 100வது திரைப்படம் உருவாகவுள்ளது. கூலி படத்தை தொடர்ந்து நாகார்ஜுனா நடிப்பில் உருவாகும் இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
தபு
இந்த நிலையில், நாகார்ஜுனாவின் 100வது திரைப்படத்தில் பாலிவுட் நடிகை இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் வேறு யாருமில்லை நடிகை தபு தான்.
இப்படத்தில் நாகார்ஜுனாவின் ஜோடியாக தபு நடிக்க வாய்ப்பில்லை என்றும், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே இவர்கள் இருவரும் இணைந்து 1996ல் வெளிவந்த 'நின்னே பெல்லடுதா' எனும் படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர்.
இப்படத்தில் இவர்களுடைய கெமிஸ்ட்ரி நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும், நாகார்ஜுனாவின் 100வது திரைப்படத்தில் இரண்டு கதாநாயகிகள் என தகவல் தெரிவிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.