தமிழ்ல பேசுங்க மேடம்.. நிருபருக்கு கீர்த்தி சுரேஷ் நக்கலாக கொடுத்த பதில்
கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் கவனம் செலுத்தி வருகிறார். அவர் நடிப்பில் தசரா என்ற தெலுங்கு படம் இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியாகி வரவேற்பை பெற்றது.
அடுத்து போலா ஷங்கர் என்ற படத்தில் அவர் நடித்து வருகிறார். மேலும் மாமன்னன், ரகுதாத்தா உள்ளிட்ட பல படங்கள் உள்ளிட்ட சில தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார்.
தமிழ்ல பேசுங்க மேடம்
இந்நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷ் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்து இருக்கிறார். அப்போது செய்தியாளர்களிடம் பேசும்போது தெலுங்கில் அவர் பேசினார்.
தமிழ்ல பேசுங்க மேடம் என ஒருவர் கேட்க, 'திருப்பதியில இருக்கேனே' என நக்கலாக பதில் கூறிவிட்டு மீண்டும் தெலுங்கிலேயே பேச தொடங்கிவிட்டார்.
வீல் சேரில் கோபி.. ஷாக் ஆன பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள்!