சரவணன் அருளுக்கு ஜோடியாக நடிகை தமன்னா.. அவரே கூறிய தகவல்

By Kathick May 31, 2022 12:50 PM GMT
Report

நடிகை தமன்னா

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக இருப்பவர் தமன்னா. கல்லூரி படத்தின் மூலம் பிரபலமான இவர் அதன்பின், படிக்காதவன், வீரம், அயன், தேவி உள்ளிட்ட படங்கள் ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டார்.

தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார். சமீபத்தில் லெஜண்ட் சரவணன் அருள் நடித்துள்ள தி லெஜண்ட் படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

சரவணன் அருளுக்கு ஜோடியாக நடிகை தமன்னா.. அவரே கூறிய தகவல் | Tamanna About To Act With Saravana Arul

கேள்விக்கு பதிலளித்த தமன்னா

இதில் தமன்னா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இது மட்டுமின்றி சரவணன் அருளுடன் நடிகை தமன்னா சில விளம்பரங்களிலும் இணைந்து நடித்திருக்கிறார். இந்நிலையில், நடிகை தமன்னாவிடம், " நீங்கள் சரவணன் அருளுக்கு ஜோடியாக இணைந்து நடிப்பீர்களா " என்று கேள்வி கேட்டகப்பட்டுள்ளது.

இதற்கு பதிலளித்த தமன்னா " சமீபகாலமாக நான் சில படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன். தேடி வரும் எல்லா படங்களிலும் ஒப்பு கொள்வவில்லை. அதனால், சரவணன் நடிக்கும் படத்தின் கதையும், எனக்கான கதாபாத்திரமும் பிடித்திருந்தால் நடிப்பேன் " என்று கூறியுள்ளார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US