நடிகை தமன்னாவுக்கு ரூ. 6 கோடி சம்பளம் வழங்கிய கர்நாடகா அரசு.. காரணம் என்ன தெரியுமா
மைசூர் சாண்டல் சோப்
மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான மைசூர் சாண்டல் சோப்பை கர்நாடக அரசு நிறுவனமான கர்நாடகா சோப் அண்ட் டிடர்ஜென்ட் தயாரித்து வருகிறது. நூற்றாண்டு சிறப்புமிக்க இந்த சோப் நிறுவனம் அரசுக்கு நல்ல வாவாய்யை கொடுத்துகிறது.
தினமும் ரூ. 12 லட்சம் மைசூர் சாண்டல் சோப்களை கர்நாடகா அரசு தயாரிக்கிறது என கூறுகின்றனர். இதன் வர்த்தகத்தை பெரிதாக்குவதற்காக அகில இந்தியளவில் பிரபலமானவர்களை, மைசூர் சாண்டல் சோப்பின் விளம்பர தூதர்களாக நியமித்து வருகிறார்கள்.
இதற்கு முன்பு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி மைசூர் சாண்டல் சோப் விளம்பர தூதராக இருந்தார். அந்த வரிசையில் தீபிகா படுகோன், ராஷ்மிகா ஆகியோருடன் நடந்து வந்த நிலையில், கடந்த ஆண்டு நடிகை தமன்னாவை விளம்பர தூதராக நியமிக்கப்பட்டார்.
தமன்னாவுக்கு ரூ. 6.27 கோடி சம்பளம்
இந்த நிலையில், நடப்பு சட்டமன்ற தொடரில் பாஜக எம்எல்ஏ சுனில் குமார், 'மைசூர் சாண்டல் சோப் விளம்பரத்திக்கான செலவு' குறித்து கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த கர்நாடகா அரசு, "நடிகை தமன்னாவுக்கு ரூ. 6.27 கோடி ஊதியம் வழங்கப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மைசூர் சாண்டல் சோப் விளம்பரத்திற்காக ரூ. 48.88 கோடி செலவிப்படடுள்ளது. மேலும் நடிகை ஐஷானி ஷெட்டிக்கு ரூ. 15 லட்சம், சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் விளம்பரத்திற்காக ரூ. 62.87 லட்சம் என மொத்தமாக ரூ. 56 கோடிக்கு விளம்பரம் செய்யப்பட்டுள்ளது" என கூறினார்.