தமன்னாவின் வருங்கால மாமியாரின் ஆசை.. விஜய்யும் தமன்னாவும் என்ன முடிவு செய்ய போகிறார்கள்
தமன்னா - விஜய் வர்மா
நடிகை தமன்னா இந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர். இவர் நடிப்பில் தற்போது ஜெயிலர் திரைப்படம் தமிழில் உருவாகி வருகிறது.
சமீபத்தில் கூட இவர் நடனமாடிய காவாலா பாடல் வெளிவந்து இணையத்தை அதிர வைத்துக்கொண்டு இருக்கிறது. நடிகை தமன்னா பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருகிறார். முதலில் கிசுகிசுக்கப்பட்ட இந்த விஷயத்தை தமன்னாவே பேட்டி ஒன்றில் உறுதி செய்தார்.

இருவரும் தங்களது காதலை ஒப்புக்கொண்ட நிலையில் இருவரும் எப்போது திருமணம் செய்துகொள்ள போகிறீர்கள் என ரசிகர்கள் கேட்டு வந்தனர். ஆனால், இருவரும் அதற்கு செவி சாய்க்கவில்லை.
தமன்னாவின் வருங்கால மாமியாரின் ஆசை
ஆனால், தற்போது அந்த கேள்வியை தமன்னாவின் வருங்கால மாமியார் கேட்க துவங்கிவிட்டாராம். எப்போது இருவரும் திருமணம் செய்துகொள்ள போகிறீர்கள் என ஆசையுடன் கேட்டுள்ளாராம்.

இதனால் கண்டிப்பாக விரைவில் தமன்னா - விஜய் வர்மா தரப்பில் இருந்து நல்ல செய்தி வெளிவரும் என நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.
உடல் எடையை குறைக்க குக் வித் கோமாளி புகழ் சுனிதா என்ன சாப்பிடுகிறார் தெரியுமா?