காதலருடன் பிரிவா? திருமணம் குறித்து தமன்னா அளித்த பதிலால் ஏற்பட்ட பரபரப்பு
தமன்னா
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி சினிமாவில் பல வெற்றி படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா.
இவர் தமிழில் அயன், பையா, வீரம், சுறா, தேவி, அரண்மனை- 4,ஜெயிலர் போன்ற பல படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை சம்பாதித்தவர். 20 ஆண்டுகளாக சினிமாவில் இருந்து, இன்றும் பல இளம் நடிகைகளுக்கு போட்டியாக ஜொலித்து கொண்டு இருக்கிறார்.
இந்த நிலையில், தமன்னா மற்றும் நடிகர் விஜய் வர்மா ஆகிய இருவரும் காதலித்து வருவதாக கூறப்பட்டு இருந்தது. இதனை உறுதிப்படுத்தும் விதத்தில் இருவரும் இணைந்து ஜோடியாக பல நிகழ்ச்சிகளுக்கு சென்று வந்தனர்.
திருமணம் எப்போது
இதனால், இந்த ஜோடி விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பாக்கப்பட்டு இருந்த நிலையில், ஐதராபாத்தில் கடை திறப்பு விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமன்னா அங்கு திருமணம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, தற்போது திருமணம் செய்யும் எண்ணம் தனக்கு இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இதனை கேட்டு, அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் இவர்கள் இருவரும் பிரிந்து விட்டனர் என்று சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
