ஜெயிலர் அப்டேட் கொடுத்த நடிகை தமன்னா.. புகைப்படத்தை பார்த்து செம குஷியில் ரசிகர்கள்
ஜெயிலர்
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் ஜெயிலர்.
இப்படத்தில் சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ரம்யா கிருஷ்ணன், ஜாக்கி ஷரோஃப், தமன்னா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
இந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் இப்படமும் ஒன்றாகும். இப்படத்தில் ரஜினிகாந்தின் காட்சிகள் எடுத்துமுடித்துவிட்டார்களாம்.

தன்னுடைய டப்பிங் கூட ரஜினி பேசி முடிக்க போகிறார் என தகவல் வெளிவந்தது. இப்படம் வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகளவில் வெளியாகிறது.
அப்டேட் கொடுத்த தமன்னா
இந்நிலையில், படத்தில் நடிகை தமன்னாவிற்காக பாடல் ஒன்று இருக்கிறதாம். இதற்கான நடன பயிற்சியில் தமன்னா இருந்து வருகிறார்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து ரசிகர்கள் அப்டேட் கொடுத்துள்ளார். இதோ அந்த புகைப்படம்..

நடிகர் ராகவா லாரன்ஸின் மனைவியை பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க