மில்க்கி பியூட்டி அப்படி நடிக்க கூடாதா.. கேள்வியால் டென்ஷன் ஆன தமன்னா
நடிகை தமன்னா தற்போது ஹிந்தி படங்களிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். அவர் அடுத்து Odela 2 என்ற படத்தில் பெண் சாது கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.
இந்த படத்தின் பிரெஸ் மீட்டில் தமன்னாவிடம் பத்திரிகையாளர் ஒருவர் கேட்ட கேள்வி அவருக்கு ஷாக் கொடுத்தது. "மில்க்கி பியூட்டி எப்படி சிவசக்தி ரோலுக்கு சரியாக இருப்பார்" என பத்திரிகையாளர் கேட்க அதற்கு தமன்னா காட்டமாக பதில் அளித்து இருக்கிறார்.
காட்டமான பதில்
"மில்க்கி பியூட்டி என சொல்கிறீர்கள். நீங்கள் ஏன் அந்த மில்க்கி பியூட்டி சிவசக்தியாக நடிக்க முடியாது என நினைக்கிறீர்கள். உங்கள் கேள்வியிலேயே பதில் இருக்கிறது."
"இயக்குனர் அசோக் தேஜா மில்க்கி பியூட்டியை பார்த்து அவமானமாகவோ அல்லது வருத்தப்படவோ எண்ணவில்லை. ஒரு பெண்ணின் கிளாமர் என்பது கொண்டாடப்பட வேண்டியது. பெண்களை தங்களையே கொண்டாட வேண்டும். அப்போது தான் மற்றவர்கள் கொண்டாடுவார்கள். உங்களையே நீங்கள் வேறு விதமாக பார்த்தால் மற்றவர்கள் மதிக்க மாட்டார்கள்" என தமன்னா கூறி இருக்கிறார்.

சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த ஐஏஎஸ் அதிகாரி.., தற்போது ஆட்சியராக நியமனம் News Lankasri

2030வாக்கில்... பிரித்தானியர்களுக்கு கவலையை ஏற்படுத்தும் செய்தி ஒன்றை தெரிவித்துள்ள ஆய்வு News Lankasri

ஸ்டோர் ரூமில் மூட்டை மூட்டையாக ரூபாய் நோட்டுகள் - நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் நடந்த அதிர்ச்சி! IBC Tamilnadu
