ராஷ்மிகா இல்லை.. தளபதி 66 ஹீரோயின் இவர்தான்! ரசிகர்கள் எதிர்பார்க்காத ஒருவர்
பீஸ்ட் படத்தின் ரிலீசுக்காக விஜய் ரசிகர்கள் அனைவரும் வெறித்தனமாக காத்திருக்கின்றனர். மறுபுறம் விஜய்யின் அடுத்த படமான தளபதி66 படத்தின் முதற்கட்ட பணிகள் நடந்து வருகிறது. ஹைதராபாத் மற்றும் சென்னையில் படத்திற்கான செட் அமைக்கும் பணிகள் நடந்து வருவதாக முன்பே தகவல் வந்தது..
தளபதி 66
தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி66 ஷூட்டிங் வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கும் என தெரிகிறது. இந்த கதையில் எமோஷனுக்கு அதிகம் முக்கியத்தும் இருக்கும் என இயக்குனர் கூறி இருப்பதால் கதை எப்படி இருக்குமோ என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
ஹீரோயின் யார்
ஹீரோயின் யார் என கடந்த சில வாரங்களாக பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. ஆரம்பத்தில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயின் என சொல்லப்பட்டது, அதன் பின்பு அவர் இல்லை ராஷ்மிகா தான் ஹீரோயின் என தகவல் பரவியது.
புஷ்பா படம் பெரிய ஹிட் ஆனதால் ராஷ்மிகாவுக்கு இந்த பட வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்றும் சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டது. ஆனால் தற்போது ராஷ்மிகாவும் இல்லை என செய்தி வந்திருக்கிறது.
தமன்னா தான் விஜய்க்கு ஜோடியாக இந்த படத்தில் நடிப்பார் என தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கு முன் சுறா படத்தில் தமன்னா விஜய்க்கு ஜோடியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை மீரா மிதுன் மீண்டும் கைது! ஜாமினில் வர முடியாத நிலை