குழந்தைகள், எதிர்கால தாய்மை குறித்து பேசிய நடிகை தமன்னா.. இணையத்தில் வைரல்
Tamannaah says she will be vibe mom to her children: தமன்னா தனது எதிர்கால தாய்மை குறித்து வெளிப்படையாக பேசிய விஷயங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
நடிகை தமன்னா
பான் இந்தியன் ஸ்டாராக வலம் வருகிறார் நடிகை தமன்னா. இவர் நடிப்பில் சமீபத்தில் The Vvaan திரைப்படம் ஹிந்தியில் வெளியாகி தோல்வியை சந்தித்துள்ளது. இதை தொடர்ந்து தமிழில் இவர் நடிப்பில் புருஷன் திரைப்படம் உருவாகி வருகிறது. சுந்தர் சி இயக்கியுள்ள இப்படத்தில் விஷாலுடன் இணைந்து தமன்னா நடித்துள்ளார். மேலும், ராகினி 3, ரேஞ்சர்ஸ், IPS மரியா உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.

எப்படிப்பட்ட தாயாக இருப்பீர்கள்?
திரைப்படங்களை தாண்டி சொந்த வாழ்க்கை குறித்து பிரபலங்களிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு அவர்கள் அளிக்கும் பதில் ரசிகர்களிடையே பரவலாக பேசப்படும். அந்த வகையில், எதிர்காலத்தில் திருமணம் செய்துகொண்டு குழந்தைகள் பெற்றுக்கொண்டால், எப்படிப்பட்ட தாயாக இருப்பீர்கள்? என நடிகை தமன்னாவிடம் கேள்வி கேட்கப்பட்டது.

தமன்னாவின் பதில்
அதற்கு பதிலளித்த நடிகை தமன்னா, "நான் ஒரு குழந்தைக்கு தாயானால் மிகவும் கண்டிப்பான அம்மாவாக இருப்பேன் என்று என் அம்மா நினைக்கிறார். ஆனால், அவரது கருத்தில் என உடன்பாடு இல்லை. நான் மிகவும் கூலான அம்மாவாகத்தான் இருப்பேன். என் குழந்தைகளுடன் மிகவும் சகஜமாகவும், ஜாலியாகவும் பழக விரும்புகிறேன். அவர்களிடம் எப்போதும் கண்டிப்புடன் நடந்து கொள்ளும் தாயாக இருக்க மாட்டேன்" என கூறுகிறார்.

மேலும், 'இன்று பள்ளிக்கு போகவேண்டாம், சந்தோஷமாக வீட்டிலேயே இருங்கள்' என்று சொல்லும் அம்மாவாக நான் இருக்க விரும்புகிறேன். என் குழந்தைகளுடன் ஒரு தாயாக மட்டுமல்லாமல், அவர்களின் நல்ல தோழியாகவும் இருக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசை" என தமன்னா கூறியிருக்கிறார். தாய்மை குறித்து தமன்னா பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு விருந்தளிக்கும் முதல்வர் விஜய் IBC Tamilnadu