அந்த விஷயத்திற்காக முன்னணி நடிகைகளை விட அதிக சம்பளம் வாங்கும் தமன்னா..
தமன்னா
ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகையாக இருப்பவர் தமன்னா பாட்டியா. முன்னணி நடிகையாக இவர் வலம் வந்தாலும் கூட, படங்களில் இடம்பெறும் சிறப்பு பாடல்கள் மூலம்தான் நான் பிரபலமானேன் என கூறியிருந்தார்.
ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற காவாலா பாடல் உலகெங்கும் வைரலானது. படத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க, இப்பாடலும் மிகப்பெரிய உதவியாக இருந்தது. இதை தொடர்ந்து ஸ்ட்ரீ 2, ரைட் 2 ஆகிய படங்களிலும் சிறப்பு பாடலுக்கு கிளாமராக தமன்னா நடனமாடினார். அந்த பாடல்கள் Youtube-ல் பல மில்லியன் பார்வையாளர்களை பெற்றது.
சம்பளம்
சமீபத்தில் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் இயக்கத்தில் வெளிவந்த Bads Of bollywood என்கிற வெப் தொடரில் சிறப்பு பாடலில் மிகவும் கிளாமராக நடனமாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தார் தமன்னா. இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் படுவைரலானது.
தொடர்ந்து சிறப்பு பாடல்களில் நடனமாடி வரும் தமன்னா, அதற்காக வாங்கும் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இதில் ஜெயிலர் படத்திற்காக ரூ. 1 கோடி, ஸ்ட்ரீ 2 மற்றும் ரைட் 2 ஆகிய படங்களுக்கு ரூ. 1 கோடி சம்பளமாக வாங்கிய தமன்னா, Bads Of bollywood வெப் தொடரில் நடனமாட ரூ. 6 கோடி சம்பளமாக பெற்றுள்ளாராம்.
இது பல முன்னணி நடிகைகள் ஒரு படத்தில் நடிக்க வாங்கும் சம்பளத்தை விட அதிகம் என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. சிறப்பு நடனத்திற்காக தமன்னா வாங்கும் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியிருந்தாலும், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்பது தெரியவில்லை.