காதலை அறிவித்த தமன்னா! அவரால் தான் இப்போ மகிழ்ச்சியாக இருக்கிறேன்
தமன்னா மற்றும் நடிகர் விஜய் வர்மா ஆகியோர் ஜோடியாக எப்போதும் சுற்றிவந்த நிலையில் அவர்கள் காதலிப்பதாக செய்திகள் பரவி வந்தது. தற்போது முதல்முறையாக தமன்னா அந்த காதலை உறுதி செய்து இருக்கிறார்.
சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அவர் தான் விஜய் வர்மாவை காதலிப்பது உண்மை தான் என கூறி இருக்கிறார். லஸ்ட் ஸ்டோரீஸ் 2 படத்தில் நடித்த போது தான் இருவருக்கும் காதல் மலர்ந்தது என கூறி இருக்கிறார்.
'ஒருவர் கோ-ஸ்டார் ஆக இருப்பதால் மட்டும் காதல் வந்துவிடாது. நான் பல கோ-ஸ்டார்களை பார்த்திருக்கிறேன். ஒருவர் மீது ஈர்ப்பு வருவது பர்சனல் விஷயம்."
மகிழ்ச்சியாக இருக்கிறேன்..
"இப்படிப்பட்ட ஒருவரை தான் நான் எதிர்பார்த்தேன். அவருடன் இயக்கையாகவே ஈர்ப்பு வந்தது. ஒரு ரிலேஷன்ஷிப்பில் இருக்கவேண்டும் என்றால் ஒருவருக்காக வாழ்க்கையையே மாற்றிக்கொள்ள வேண்டும் என்கிற நிலை தான் இந்தியாவில் இருக்கிறது."
"ஆனால் நான் எனக்காக உருவாக்கி வைத்திருந்த உலகத்தில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் அவர் புரிந்துகொண்டார். அவர் மீது தற்போது எனக்கு அதிக அக்கறை இருக்கிறது. அவரால் தற்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன்" என தமன்னா கூறி இருக்கிறார்.
ஏர்போர்டில் தலைதெறிக்க ஓடிய சாரா அலி கான்! வீடியோ வைரல்.. என்ன நடந்தது?

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
