தமன்னா முன்னாள் காதலர்.. காதலை எதனுடன் ஒப்பிட்டிருக்கிறார் பாருங்க
நடிகை தமன்னா தமிழ் சினிமாவை தாண்டி தெலுங்கு, ஹிந்தி என நடித்து வருகிறார். ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சி டான்ஸ் ஆடுவது. வெப் சீரிஸில் கிளாமராக நடிப்பது என அவர் தற்போது வேற லெவல் உச்சத்தில் இருக்கிறார்.
தமன்னா கடந்த சில வருடங்களாக நடிகர் விஜய் வர்மா உடன் காதலில் இருந்தார். ஜோடியாக நிகழ்ச்சிகளுக்கு சென்று கொண்டு இருந்தார்கள்.
ஆனால் தற்போது திடீரென அவர்கள் பிரேக்அப் செய்துவிட்டனர். அவர்கள் பிரிந்தது ஏன் என பல்வேறு தகவல்கள் உலா வருகிறது. தமன்னா திருமணம் செய்ய கேட்ட நிலையில் விஜய் வர்மா அதற்கு ஒப்புக்கொள்ளாதது தான் பிரேக்அப்புக்கு காரணம் என கூறப்படுகிறது.
காதல் எனது ஐஸ்கிரீம்
விஜய் வர்மா தற்போது அளித்த பேட்டி ஒன்றில் காதலை ஐஸ்கிரீம் உடன் ஒப்பிட்டு பேசி இருக்கிறார்.
"காதல் என்பது ஐஸ்கிரீம் மாதிரி என்ஜாய் செய்தால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். எந்த flavor வந்தாலும், அதை வாங்கிக்கொண்டு, அதனுடன் இருக்க வேண்டும்" என கூறி இருக்கிறார்.