துர்க்கை அம்மனுக்கு கடுமையான விரதம்.. ஆன்மிகத்தில் மூழ்கிய நடிகை தமன்னா..

By Karthick Raja Oct 16, 2026 04:30 AM GMT
Report

Tamannaah Bhatia Fasting: நடிகை தமன்னா துர்க்கை அம்மனுக்கு வாரத்தில் 3 நாட்கள் கடுமையான விரதம் இருந்து வருவதாக வெளியாகியுள்ள செய்தி, ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம் வாங்க.

பாக்ஸ் ஆபிஸ்: ஜெயிலர் 2 முதல் நாள் உலகளவில் செய்துள்ள வசூல்

பாக்ஸ் ஆபிஸ்: ஜெயிலர் 2 முதல் நாள் உலகளவில் செய்துள்ள வசூல்

நடிகை தமன்னா

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை தமன்னா. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக சினிமாவில் பயணித்து வரும் இவர் நடிப்பில் சமீபத்தில் பாலிவுட்டில் The Vvaan திரைப்படம் வெளியானது. இதை தொடர்ந்து ராகினி 3, புருஷன் ஆகிய திரைப்படங்கள் இவர் நடிப்பில் வெளியாக உள்ளன.

துர்க்கை அம்மனுக்கு கடுமையான விரதம்.. ஆன்மிகத்தில் மூழ்கிய நடிகை தமன்னா.. | Tamannaah Fasting Weekly 3 Days For Durgai Amman

துர்க்கை அம்மனுக்கு விரதம்

சினிமாவில் பிசியாக நடித்து வரும் நடிகை தமன்னா, தனது நிஜ வாழ்க்கையில் தீவிர கடவுள் பக்தி கொண்டவராக இருக்கிறார். கடந்த ஆண்டு வெளியான ஓடேலா 2 திரைப்படத்தில் சிவபக்தையாக நடித்திருந்தார். மேலும், கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் மகாசிவராத்திரி விழாவில் தவறாமல் கலந்துகொள்கிறார்.

துர்க்கை அம்மனுக்கு கடுமையான விரதம்.. ஆன்மிகத்தில் மூழ்கிய நடிகை தமன்னா.. | Tamannaah Fasting Weekly 3 Days For Durgai Amman

இப்படி தீவிர ஆன்மிகத்தில் உள்ள நடிகை தமன்னா, வாரத்தில் மூன்று நாட்கள் கட்டாயமாக விரதம் இருந்து வருவதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. சிவபெருமானின் தீவிர பக்தையாக உள்ள தமன்னா, தற்போது துர்க்கை அம்மனுக்காக வாரத்தில் மூன்று நாட்கள் விரதத்தை கடைப்பிடித்து வருகிறாராம்.

துர்க்கை அம்மனுக்கு கடுமையான விரதம்.. ஆன்மிகத்தில் மூழ்கிய நடிகை தமன்னா.. | Tamannaah Fasting Weekly 3 Days For Durgai Amman

இந்த விரத நாட்களில் சில நேரங்களில் முற்றிலும் உணவை தவிர்த்து, நாள் முழுவதும் விரதம் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், மற்ற நாட்களில் வழக்கமான உணவுகளை உட்கொள்ளாமல் பழங்கள் மற்றும் இயற்கை உணவுகளை மட்டுமே தமன்னா எடுத்துக்கொள்வதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. இது தமன்னாவின் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

துர்க்கை அம்மனுக்கு கடுமையான விரதம்.. ஆன்மிகத்தில் மூழ்கிய நடிகை தமன்னா.. | Tamannaah Fasting Weekly 3 Days For Durgai Amman

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US