ரஜினியின் ஜெயிலர் படத்தில் இணைந்த ஹீரோயின்! ஷூட்டிங் போட்டோவுடன் அறிவித்த சன் பிக்சர்ஸ்
ஜெயிலர்
ரஜினிகாந்த் அடுத்து நடித்து வரும் படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கன்னட நடிகர் ஷிவ ராஜ்குமார், மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில் என பலரும் முக்கிய ரோல்களில் நடித்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது மேலும் ஒரு இணைப்பாக ஹீரோயின் பற்றிய விவரத்தை சன் பிக்சர்ஸ் அறிவித்து இருக்கிறது.

தமன்னா
ஜெயிலர் ஷூட்டிங் ஸ்பாட்டில் தமன்னா இருக்கும் போட்டோவை தற்போது சன் பிக்சர்ஸ் வெளியிட்டு இருக்கிறது. அதனால் படத்தில் அவர் தான் ஹீரோயின் என்பது உறுதியாகி இருக்கிறது.
இருப்பினும் அவர் ரஜினியின் ஜோடியாக நடிக்கிறாரா அல்லது வேறு முக்கிய ரோலில் நடிக்கிறாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
.@tamannaahspeaks from the sets of #Jailer
— Sun Pictures (@sunpictures) January 19, 2023
@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial pic.twitter.com/sKxGbQcfXL
வாரிசு Vs துணிவு - வசூலில் இவ்வளவு தான் வித்தியாசம்! உண்மையை போட்டுடைத்த பிரபலம்