அதன் மீது இம்புட்டு காதலா?.. நடிகை தமன்னா சொன்ன சீக்ரெட்
தமன்னா
இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தமன்னா. படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என கலக்கிக்கொண்டு இருக்கும் இவர் ஜெயிலர், ஸ்ட்ரீ 2 போன்ற சூப்பர்ஹிட் படங்களின் பாடலுக்கு சிறப்பு நடனமாடி ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை பெற்று விட்டார்.
சீக்ரெட்
இந்நிலையில், பேட்டி ஒன்றில் உணவு குறித்து நடிகை தமன்னா பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், " எனக்கு சமோசா என்றால் மிகவும் பிடிக்கும். 'ஐ லவ் சமோசா' என்று தன் டீ-ஷர்ட்டில் அச்சடித்து போட்டுக் கொள்ளும் அளவுக்கு எனக்கு சமோசா மீது தீராத காதல்.
இந்த முக்கோண வடிவ உணவிற்காக எதையும் செய்வேன். ஒரே நேரத்தில் 5 சமோசாக்கள் வரை சாப்பிடுவேன், அதனுடன் காஃபி சேர்த்து சாப்பிட்டால் சுவை இன்னும் அதிகரிக்கும்.
உருளைக்கிழங்கு கலந்த சாதாரண சமோசாக்கள் தான் எனக்கு பிடிக்கும், பன்னீர் அல்லது வேறு எந்த சேர்க்கைகளும் வேண்டாம்" என்று தெரிவித்துள்ளார்.