6 நிமிடங்கள் நடனம் ஆடுவதற்கு தமன்னா வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் தமன்னா. இவர் கடைசியாக தமிழில் அரண்மனை 4 படத்தில் நடித்திருந்தார். இதன்பின் இந்தியில் பிஸியாகியுள்ள நடிகை தமன்னாவின் கைவசம் மூன்று இந்தி படங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கதாபாத்திரங்களில் நடிப்பதை தாண்டி, நடிகை தமன்னாவை சிறப்பு பாடலில் நடனமாட கமிட் செய்து வருகிறார்கள். கே.ஜி.எப், ஜெயிலர், ஸ்ட்ரீ 2, ரெய்டு 2 போன்ற படங்களில் தமன்னா சிறப்பு பாடலுக்கு நடனமாடியது படு வைரலானது.
சம்பளம்
சமீபத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக கோவாவில் நடனமாடி இருந்தார். அந்த வீடியோ கூட ரசிகர்களால் இணையத்தில் வைரலாக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த கொண்டாட்டத்தில் 6 நிமிடங்கள் தமன்னா நடனமாடி இருந்தார்.

இந்த 6 நிமிடங்கள் நடனமாட அவருக்கு ரூ. 6 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன்மூலம் நடனத்திற்காக மட்டுமே அதிக சம்பளம் வாங்கும் நட்சத்திரம் என்கிற அந்தஸ்தை தமன்னா பெற்றுள்ளார்.
Super Singer 11: சூப்பர்சிங்கரில் ஐந்தாவது ஃபைனலிஸ்டாக சென்றது யார்? அரங்கமே கண்ணீரில் ஆழ்ந்த தருணம் Manithan