'போலியான புகைப்படங்களை பரப்பி ஆனந்தம் கொள்ளாதீர்கள்'.. நடிகை தமன்னாவின் வேண்டுகோள்
தமன்னா
இந்திய அளவில் பிரபலமான நடிகையாக வலம் வரும் தமன்னா, தற்போது ராகினி 3, The Vvaan-Force of the Forrest மற்றும் வி. சாந்தாராம் உள்பட ஐந்து பாலிவுட் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

நடிப்பை தாண்டி சிறப்பு பாடல்களில் தோன்றி நடனமாடி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இவருடைய நடனத்தில் ஒரு பாடல் வெளியாகிறது என்றால், கண்டிப்பாக Youtube-ல் அந்த பாடல் பல மில்லியன்களை கடந்துவிடும் என்பதில் சந்தேகமே இல்லை.

தமிழில் இவர் நடிப்பில் அடுத்ததாக 'புருஷன்' திரைப்படம் உருவாகி வருகிறது. இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடித்து வருகிறார். இப்படத்தின் மீது ரசிகர்கள் எதிர்பார்ப்பை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமன்னாவின் வேண்டுகோள்
இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகை தமன்னா பேசும்போது, "ரசிகர்களை மகிழ்விப்பது தான் ஒரு நடிகையாக எனக்குள்ள பொறுப்பு என்று நான் நினைக்கிறேன். அப்படி ரசிகர்களை மகிழ்விக்கும் நடிகைகளை கொண்டாடுங்கள், விமர்சிக்காதீர்கள்.

போலியான தகவல்களையும், புகைப்படங்களையும் பரப்பி ஆனந்தம் கொள்ளாதீர்கள். இது என் தாழ்மையான வேண்டுகோள்" என கூறினார். நடிகை தமன்னாவின் இந்த கருத்து தற்போது ரசிகர்களிடையே கவனத்தை பெற்றுள்ளது.
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ஹவுதிகள்... சவுதி அராம்கோ எண்ணெய் நிலையம் மீது ஏவுகணை வீச்சு News Lankasri