30 வயசில் கல்யாணம்.. 2 குழந்தைகள் பெற நினைத்த தமன்னா! ஆனால்..
தமன்னா
நடிகை தமன்னாவின் காதல் விவகாரம் தான் தற்போது சினிமா வட்டாரத்தில் அதிகம் பேசப்படும் விஷயம் ஆகி இருக்கிறது. அவர் ஹிந்தி நடிகர் விஜய் வர்மா உடன் காதலில் இருப்பதை உறுதி செய்திருக்கிறார்.
மற்ற ஹீரோக்கள் படங்களில் முத்த காட்சியில் நடிக்க முடியாது என ஸ்ட்ரிக்ட் ஆக மறுத்துவிடும் தமன்னா, விஜய் வர்மா உடன் ஒரு லெவல் அதிகமாகவே நெருக்கமான காட்சியில் நடித்து இருக்கிறார்.

30 வயதில் திருமணம்..
இந்நிலையில் தற்போது தனது திருமணம் பற்றி ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார் தமன்னா. அவர் சினிமாவிற்கு வந்த நேரத்தில் தான் 10 வருடம் இந்த துறையில் இருப்பதே கஷ்டம் என நினைத்தாராம். அதனால் 30 வயதில் தனக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கும் என திட்டம் போட்டு வைத்திருந்தாராம். ஆனால் தற்போது 30 வயதில் மீண்டும் பிறந்ததாக உணர்கிறேன்.

பெரிய பொறுப்பு
திருமணம் என்பது ஒரு பெரிய பொறுப்பு. அது பார்ட்டி அல்ல. அதற்கு பல விஷயங்கள் செயய் வேண்டும்.
அதனால் அந்த பொறுப்புகளை எப்போது ஏற்றுக்கொள்ள முடியும் என தோன்றுகிறதோ அப்போது தான் திருமணம் செய்வேன் என தமன்னா கூறி இருக்கிறார்.
Also See: வீரம் படத்தில் நடித்த குழந்தையா இது? இப்போ எப்படி மாறி இருக்கிறார் பாருங்க