காதல் தோல்வி
முன்னணி நடிகை தமன்னா பிரபல பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வந்தார். கடந்த 2023ம் ஆண்டு இந்த தகவல் வெளிவந்த நிலையில், அதன்பின் இருவரும் காதலித்து வருவதாக உறுதி செய்தனர்.
ஆனால், திடீரென கடந்த சில நாட்களாக தமன்னா மற்றும் விஜய் வர்மா பிரித்துவிட்டதாகவும், அவர்களுடைய காதல் முறிந்துவிட்டதாகவும் பேச்சு எழுந்துள்ளது. இதுகுறித்து தமன்னா மற்றும் விஜய் வர்மா தரப்பில் இருந்து இதுவரை மறுப்பு தெரிவிக்கவில்லை. இதன்மூலம் ஏறக்குறைய இவர்களுடைய பிரிவு உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரிவுக்கு காரணம் இதுதானா
இந்த நிலையில், இவர்கள் இருவரும் எதற்காக பிரிந்தார்கள், காரணம் ன்ன என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நடிகை தமன்னாவிற்கு தற்போது 35 வயது ஆகிறது. இந்த ஆண்டு திருமணம் செய்துகொள்ள வேண்டும் என தன்னுடைய ஆசையை விஜய் வர்மாவிடம் கூறியுள்ளார்.
ஆனால், விஜய் வர்மாவிற்கு தற்போது திருமணம் செய்துகொள்வதில் உடன்பாடு இல்லையாம். இன்னும் சில வருடங்கள் காதலித்துவிட்டு பின் திருமணம் செய்துகொள்ளலாம் என கூறியுள்ளாராம். இதை தமன்னா மற்றும் அவருடைய குடும்பம் ஏற்கவில்லை.
இந்த பிரச்சனை ஒரு கட்டத்தில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இருவரும் பிரிய முடிவு எடுத்துவிட்டனர் என கூறப்படுகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
You May Like This Video