கிசுகிசுக்கப்படும் காதலருடன் இரவில் ஒன்றாக சென்ற நடிகை தமன்னா.. வைரலாகும் புகைப்படம்
தமன்னா
ரசிகர்கள் மத்தியில் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் தமன்னா. இவர் தற்போது ரஜினியின் ஜெயிலர் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.

மேலும் சுந்தர்.சி இயக்கி வரும் அரண்மனை 4ல் கதாநாயகியாக நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி பாலிவுட் திரையுலகிலும் பிசியாக இருக்கும் நடிகைகளில் தமன்னாவும் ஒருவர். படங்கள், வெப் தொடர் என தொடர்ந்து இந்தியில் கவனம் செலுத்தி வருகிறார்.
வைரல் புகைப்படம்
நடிகை தமன்னா பிரபல பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருகிறார் என கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே இரவு பார்ட்டி ஒன்றில் இருவரும் நெருக்கமாக முத்தம் கொடுத்துக்கொண்ட புகைப்படம் படுவைரலானது. அதை தொடர்ந்து இருவரும் திருமணம் எப்போது செய்துகொள்ள போகிறார்கள் என கேள்வி எழுந்தது.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு விஜய் வர்மாவுடன் இரவில் ஒன்றாக நடிகை தமன்னா இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இதை பார்த்த ரசிகர்கள் இருவரும் டேட்டிங் செய்து வருவதை உறுதி என்பது போல் சமூக வலைத்தளத்தில் பேசி வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..
 
                                        
                                         
                 
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    