மீண்டும் விஜய் டிவி-யின் முக்கிய நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் தாமரை செல்வி! வெளியான லேட்டஸ்ட் தகவல்..
விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் தான் தாமரை செல்வி.
நாட்டுப்புற கலைஞரான இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி இறுதிபோட்டிக்கு முந்தைய வாரம் வெளியேறியுள்ளார்.
மேலும் தற்போது விஜய் டிவி-ன் மற்றுமொரு முக்கிய நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் தாமரை செல்வி கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் வீட்டில் இருந்த போது தாமரை செல்வியின் சமையலை தான் அனைவரும் பாராட்டி வந்தனர். அப்படி இருக்கையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு அவர் செல்ல வேண்டும் என ரசிகர்கள் அனைவரும் கூறிவருகின்றனர்.
இதனிடையே ஏற்கனவே குக் வித் கோமாளியின் அடுத்த சீசனில் அர்ச்சனா, ஊர்வசி, விஜயலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொள்வதாக கூறப்பட்டது. மேலும் தற்போது இவர்களில் தாமரை செல்வியின் பெயரும் அடிபட்டு வருகிறது.