முன்னணி நடிகர் சூர்யாவின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ
சூர்யா
நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர். இவர் நடிப்பில் தற்போது கங்குவா திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் கங்குவாவும் ஒன்று.
இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். பாலிவுட் நடிகை திஷா பாட்னி இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். கங்குவா படத்தை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருந்த திரைப்படம் புறநானூறு.
இப்படம் திடீரென சில காரணங்களால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என கூறுகின்றனர். இதனால் கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் உருவாகும் தனது 44வது திரைப்படத்தில் நடிக்க ரெடியாகிவிட்டார் சூர்யா. இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் முதல் துவங்கும் என இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் தெரிவித்துள்ளார்.
சொத்து மதிப்பு
தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கும் நடிகர் சூர்யாவின் சொத்து மதிப்பு குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 350 கோடி என கூறப்படுகிறது.
இந்த தகவல் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri
