ரூ. 100 கோடியை எட்டிய சம்பளம்- தமிழ் சினிமா நடிகர்களின் முழு சம்பள பட்டியல் 2022
இந்திய சினிமா பெரிய அளவு வளர்ந்திருப்பதற்கு தமிழ் சினிமாவும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த மொழியில் வரும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருக்கிறது.
தமிழ் சினிமா எந்த அளவிற்கு வளர்கிறதோ அதே அளவிற்கு நடிகர்களின் சம்பளமும் உயர்ந்துகொண்டே வருகிறது. முக்கிய நடிகர்களான ரஜினி, விஜய், அஜித் ஆகியோருக்கு சம்பளம் எல்லாம் ரூ. 100 கோடியை எட்டிவிட்டது.
அப்படி தமிழ் சினிமா நடிகர்கள் இந்த ஆண்டு நிலவரப்படி எவ்வளவு சம்பளம் பெறுகிறார்கள் என்ற விவரத்தை காண்போம்.
விஜய்
தமிழ் சினிமாவின் இளைய தளபதியாக பல ஆண்டுகளாக கொடிகட்டி பறப்பவர் விஜய். இவரது படங்கள் ரிலீஸ் என்றாலே தமிழ்நாடே திருவிழா கோலமாக இருக்கும். தமிழை தாண்டி ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களிலும் இவரது புகழ் பெரிய அளவில் உள்ளது.
கடைசியாக விஜய் நடிப்பில் வந்த பீஸ்ட் திரைப்படம் தான் கதையில் கொஞ்சம் சொதப்பிவிட்டது. ஆனால் விஜய்யின் சம்பள விஷயம் மட்டும் ஏறிக்கொண்டே தான் இருக்கிறது.
தற்போதைய நிலவரப்படி விஜய் ஒரு படத்திற்கு ரூ. 118 கோடி வரை சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது.
அஜித்
தமிழ் சினிமாவின் அல்டிமேட் ஸ்டார், தல என கொண்டாடப்படும் நடிகர், ஆனால் அவர் இந்த பெயர்கள் எதுவும் வேண்டாம் அஜித் மட்டுமே அழையுங்கள் என்றார். இவரது விஸ்வாசம், வலிமை திரைப்படங்கள் தமிழகத்தில் மட்டும் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்திருந்தது.
வலிமை படத்திற்கு அஜித் ரூ. 60 கோடி சம்பளம் பெற்றார் என்றனர். தற்போது லைகா தயாரிப்பில் அஜித் நடிக்கும் 62வது படத்திற்கு ரூ. 105 கோடி வரை அவர் சம்பளம் பெறுகிறாராம்.
ரஜினி
அஜித், விஜய் என்ற நடிகர்களுக்கு முன்பே ரூ. 100 கோடி வசூல் சாதனைகள் செய்தவர். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான அண்ணாத்த திரைப்படத்திற்காக ரஜினி ரூ. 105 கோடி சம்பளம் பெற்றார் என்றனர்.
ஆனால் படம் சரியாக ஓடாத நிலையில் அப்பட தயாரிப்பிலேயே அடுத்த படம் ரஜினி நடிக்கிறார். அண்ணாத்த பட இழப்பீட்டை ஈடுசெய்ய அவர் ரூ. 80 கோடி சம்பளம் 169வது படத்திற்கு வாங்க இருக்கிறாராம்.
கமல்ஹாசன்
இவரை பார்த்து சினிமா பல விஷயங்களை கற்றுக்கொண்டது எனலாம். இவரது சம்பளம் ரூ. 35 கோடி என்ற அளவிலேயே தான் இருக்கிறது.
சூர்யா
என்னதான் நிறைய வெற்றிப்படங்கள் கொடுத்தாலும் சூர்யாவின் சம்பளம் மட்டும் பெரிய அளவில் உயரவே இல்லை. சூரரைப்போற்று, ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன் போன்ற படங்களின் வெற்றி தான் சூர்யா ரூ. 28 கோடி சம்பளம் பெற காரணமாக உள்ளது.
தமிழ் சினிமாவின் இந்த முக்கிய நடிகர்களை தாண்டி மற்ற பிரபலங்கள் எவ்வளவு சம்பளம் பெறுகிறார்கள் என்ற முழு விவரம் இதோ,
- சிவகார்த்திகேயன்- ரூ. 25 கோடி
- தனுஷ்- ரூ. 20 கோடி
- விஜய் சேதுபதி- ரூ. 5 முதல் 10 கோடி
- விக்ரம்- ரூ. 15 கோடி
- விஷால்- ரூ. 4 முதல் 5 கோடி
- ஆர்யா- ரூ. 4 முதல் 5 கோடி
- ஜெயம் ரவி- ரூ. 5 முதல் 8 கோடி
- ஜீவா- ரூ. 4 முதல் 6 கோடி
- கார்த்தி- ரூ. 10 கோடி
- பிரகாஷ் ராஜ்- ரூ. 3 முதல் 5 கோடி
- சந்தானம்- ரூ. 5 கோடி
- சத்யராஜ்- ரூ. 2 கோடி (பாகுபலி 2)
- சித்தார்த்- ரூ. 2 முதல் 3 கோடி
- சிம்பு- ரூ. 7 முதல் 8 கோடி