மருத்துவமனையில் அட்மிட் ஆகும் அளவிற்கு ஒரு நபரை அடித்துள்ள சீரியல் நடிகை- பரபரப்பான தகவல்
பிரபல நடிகை
தமிழ் சினிமாவில் கடந்த 2002ம் ஆண்டு முரளி மற்றும் வடிவேலு நடிப்பில் வெளியாகி செம ஹிட்டடித்த திரைப்படம் சுந்தரா டிராவல்ஸ்.
இந்த படத்தில் முரளிக்கு ஜோடியாக நடித்தவர் தான் நடிகை ராதா. இவர் மானஸ்தன், காத்தவராயன் உள்ளிட்ட படங்களிலும் ஒரு சில சீரியல்களிலும் நடித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா 2 சீரியலிலும் வில்லி ரோலில் நடித்திருந்தார்.
பரபரப்பு தகவல்
இந்த நிலையில் நடிகை ராதாவுடன் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்ததாகவும், இதுகுறித்து அவரிடம் பேசியபோது அவர் தன்னை தாக்கியதாக முரளி என்பவர் வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த நிலையில் அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.