அழகுக்காக அறுவை சிகிச்சை செய்துகொண்ட பிரபல தமிழ் நடிகைகள் !
திரைத்துறையில் நிலைத்து நிற்க எப்போதும் சரியாக இருப்பது அவசியம், அப்படி பார்க்கையில் நடிப்பது, நடனமாடுவது மட்டுமின்றி தங்களின் லுக்கை மேம்படுத்தி கொள்வதில் நட்சத்திரங்கள் அரவம் காட்டுவது வழக்கம். ஏன்னென்றால் அதுவே தங்களுக்கு அடுத்தடுத்த படங்களில் வாய்ப்பு மற்றும் ரசிகர்களை கவரவும் காரணமாக இருக்கும்.
அப்படி நடிகைகள் தங்களின் லுக்கை மேம்படுத்தி கொள்ள பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொள்ளவது உண்டு, தங்களின் முகங்களில் உள்ள பாகங்களை தங்களுக்கு ஏற்றார் போல மாற்றி கொள்வார்கள். அந்த வகையில் அழகுக்காக அறுவை சிகிச்சை செய்துகொண்டு அதனை மறுபவர்களும் இருக்கிறார்கள். இதனிடையே தற்போது அழகுக்காக அறுவை சிகிச்சை செய்துகொண்ட முக்கிய நடிகைகள் குறித்த பட்டியலை தான் பார்க்கவுள்ளோம்.
சமந்தா
தென்னிந்தியளவில் இன்று முன்னணி நடிகையாகவும் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராகவும் திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. ஆரம்ப காலங்களில் அவர் நடித்த படங்களை விட தற்போது சமந்தா இன்னும் அழகாக மாறியிருப்பது அவர் செய்த அறுவை சிகிச்சை தான் காரணம். சமந்தா 2012 ஆம் ஆண்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டார் என்றும் Yeto Vellipoyindi Manasu என்ற தெலுங்கு படத்தில் இருந்து அவர் முகத்தில் மாற்றம் தெரிந்தது எனவும் கூறப்படுகிறது.

நயன்தாரா
தமிழ் சினிமாவின் டாப் நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா, இவர் 2005-ல் வெளியான ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானது குறிப்பிடத்தக்கது. அவரின் அறிமுக படத்திற்கும் தற்போதைய நிலைக்கும் உள்ள வித்தியாசத்தை பார்த்தலே நன்றாக மாறுதல் தெரிந்துவிடும். நயன்தாரா தனது உடலில் உள்ள கொழுப்பை குறைக்க அறுவை சிகிச்சை செய்துகொண்டதாக சொல்லப்படுகிறது.

காஜல் அகர்வால்
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் டாப் நடிகை காஜல் அகர்வால், இவர் மகதீரா திரைப்படத்தின் சினிமாவிற்கு அறிமுகமானார். இவரும் தனது அழகை மேம்படுத்தி கொள்ள முகத்தில் அறுவை சிகிச்சை செய்துகொண்டதாக சொல்லப்படுகிறது.

தமன்னா
தமிழ் திரையுலகின் சென்சேஷன் நடிகையாக திகழ்ந்தவர் தமன்னா, தனது ஆரம்ப கால படங்களின் மூலமே தமன்னாவிற்கு பெரிய ரசிகர்கள் கூட்டம் உருவானது. மேலும் ஆரம்ப கால படங்களுக்கும் அவரின் தற்போதையே படங்களுக்கும் நிறைய வித்தியாசம் தெரியும். அதன்படி அவர் முகத்தில் அறுவை சிகிச்சை செய்துகொண்டதாகவும், ஆனால் இது குறித்து அவர் வெளியே மறுப்பதாகவும் சொல்லப்படுகிறது.

திரிஷா
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை திரிஷா, மிஸ் சென்னை 1999 பட்டத்தை வென்ற திரிஷா மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். மேலும் திரிஷா rhinoplasty என்ற அறுவை சிகிச்சை செய்துகொண்டதாகவும், அதன்முலம் அவரின் மூக்கு பகுதியை மாற்றிக்கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.

ஸ்ருதிஹாசன்
தமிழ் சினிமாவின் பிரபல நடிகையும் நடிகர் கமலின் மகளுமான ஸ்ருதிஹாசன், தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். திரையுலகிற்கு அறிமுகமாகும் முன்பே நடிகை ஸ்ருதிஹாசன் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். மேலும் அதனை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு ஒப்புக்கொள்ளவும் செய்தார்.
