பிக்பாஸ் 9வது சீசன் யாருமே எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆரம்பமாகிறதா...
பிக்பாஸ்
பிக்பாஸ், தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிரம்மாண்ட நிகழ்ச்சியே இதுதான்.
100 நாட்கள் 15க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள், விதவிதமான டாஸ்க், வியக்க வைக்கும் வீடு, மாஸான தொகுப்பாளர் என இதில் உள்ள அனைத்துமே பிரம்மாண்டம் தான்.
கடைசியாக பிக்பாஸ் 8வது சீசன் வெற்றிகரமாக முடிந்தது, அதன் வெற்றியாளராக முத்துக்குமரன் தேர்வானார், அந்த முடிவை மக்களும் கொண்டாடினார்கள்.
அடுத்த சீசன்
ஹாலிவுட்டில் இருந்து பாலிவுட் பக்கம் வந்த இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி அங்கு 15 சீசன்களுக்கு மேல் வெற்றிகரமாக ஒளிபரப்பானது. தமிழில் கடைசியாக 8வது சீசன் வரை ஒளிபரப்பானது, இந்த வருட ஜனவரி மாதம் தான் முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில் பிக்பாஸ் 9வது சீசன் பற்றிய தகவல்கள் வர ஆரம்பித்துள்ளன. பிக்பாஸ் முதல் 3 சீசன்கள் ஜுன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் முடிந்தது. கொரோனாவிற்கு பின் அக்டோபர் தொடங்கி ஜனவரி மாதம் முடிவுக்கு வந்தது.
தற்போது 9வது சீசன் குறித்து என்ன தகவல் என்றால் இந்த புதிய சீசன் செப்டம்பர் மாதமே தொடங்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

நிமிஷா பிரியா மரண தண்டனை ரத்து? விரைவில் இந்தியா திரும்புவார் - உண்மை நிலவரம் இதுதான்! IBC Tamilnadu
