கன்னடத்தில் ஒளிபரப்பாக போகும் சமையல் நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி பிரபலம்- யாரு தெரியுமா?
தமிழ்நாட்டு ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி.
காமெடி, சமையல், கலாட்டா என அனைத்தும் நிறைந்த ஷோவாக உள்ளது.
நிகழ்ச்சியின் இறுதி கட்டத்திற்கு நாம் வந்துவிட்டோம், விரைவில் நிகழ்ச்சியின் இறுதிகட்டமும் ஒளிபரப்பாக உள்ளது. அதேசமயம் நிகழ்ச்சி ரீ-டெலிகாஸ்ட் ஆகவும் உள்ளதாம்.
தமிழில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி நன்றாக பிரபலம் அடைய கன்னடத்தில் நிகழ்ச்சி உருவாக இருந்தது.
குக் வித் கிருக்கு என்கிற பெயரில் நிகழ்ச்சி நடக்கவுள்ளது. இந்த தகவலை நாம் ஏற்கெனவே அறிவித்திருந்தோம்.
இப்போது என்ன தகவல் என்றால் இன்னும் 2 நாட்களில் தொடங்க இருக்கும் இந்நிகழ்ச்சியில் நடுவர் வெங்கடேஷ் பட் கலந்து கொள்கிறாராம்.
அவரே இதுகுறித்து தனது இன்ஸ்டா பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.